எச். கே. பைரோதியா விருதுகள்
எச். கே. பைரோதியா விருதுகள் | |
---|---|
அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்பிற்காக | |
இதை வழங்குவோர் | எச். கே. பைரோதியா அறக்கட்டளை |
வெகுமதி(கள்) | ₹2 லட்சம் & ₹1 லட்சம் |
முதலில் வழங்கப்பட்டது | 1996 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2014 |
அண்மை விருதாளர் | கை. சிவன் |
Highlights | |
Total awarded | 53 |
இணையதளம் | hkfirodiaawards |
எச். கே. பைரோதியா விருதுகள் (H. K. Firodia Awards) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் எச். கே. பைரோதியா அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது . எந்தவொரு அறிவியல் துறையிலும் இந்திய அறிவியலாளர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காகவும், இளம் இந்தியர்களிடையே அறிவியல் உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவும் இந்த விருதுகள் 1996-ல் தொடங்கப்பட்டன.
புனேயில் நடைபெறும் விழாவில், கபில் சிபல், முகேசு அம்பானி, வர்கீஸ் குரியன் போன்ற முக்கிய விருந்தினர்களால் விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது
[தொகு]எச். கே. பைரோதியா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் 2 பேருக்கு வழங்கப்படுகிறது.
- விருது I: ஒரு நபரின் வாழ்நாள் சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் செய்த பங்களிப்பிற்காகவும் வழங்கப்படும் விருது .
- விருது II: இரண்டாவது விருது இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்பாளர்கள், அறிவியலாளர்களின் பங்களிப்பிற்காக தொழில்நுட்பவியலாளர்களுக்கு வழங்கப்படும் விருது.
இந்த விருதுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்து, உலகத் தரம் வாய்ந்த பணிகளைச் செய்து, தன்னைத் தானே சிறப்பித்துக் கொண்ட எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும். வேளாண்மை, பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் முதல் விண்வெளி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் என வழங்கப்படுகிறது.
விருது பெற்றவர்களின் பட்டியல்
[தொகு]ஆதாரம்: HK ஃபிரோடியா அறக்கட்டளை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
ஆண்டு | அறிவியலாளர் | பிரிவு |
---|---|---|
1996 | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | பொறியியல் & விண்வெளி |
விஜய் பட்கர் | கணினி அறிவியல் | |
1997 | சிந்தாமணி நாகேச இராமச்சந்தி | வேதியியல் |
அனில் காகோட்கர் | அணுக்கரு | |
1998 | இராசகோபாலன் சிதம்பரம் | அணுக்கரு |
எஸ். கே. சிக்கா | அணுக்கரு | |
1999 | கி. கஸ்தூரிரங்கன் | பொறியியல் & விண்வெளி |
பால் இரத்தினசாமி | வேதியியல் | |
மன் மோகன் சர்மா | வேதியியல் | |
2000 | ரகுநாத் அனந்த் மசேல்கர் | பொறியியல் & விண்வெளி |
டி. டி. பாவால்கர் | அணுக்கரு | |
2001 | கோவிந்த் சுவரூப் | வானியல் & வானியற்பியல் |
இராமானுஜம் வரதராஜப் பெரும | பொறியியல் & விண்வெளி | |
2002 | எம். எஸ். வாலிதன் | உயிரியல், மருத்துவம் & மரபியல் |
அசோக் ஜூன்ஜூன்வாலா | கணினி அறிவியல் | |
2003 | பிரகாஷ் நரைன் தாண்டன் | உயிரியல், மருத்துவம் & மரபியல் |
பத்மநாபன் பலராம் | வேதியியல் | |
2004 | இபைடி சித்திக் | உயிரியல், மருத்துவம் & மரபியல் |
டி. எஸ். பிரகலாத் | பொறியியல் & விண்வெளி | |
2005 | மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் | வேளாண்மை |
ஜி. மாதவன் | பொறியியல் & விண்வெளி | |
அசோக சென் | கணிதம் | |
2006 | ஜயந்த் நாரளீக்கர் | வானியல் & வானியற்பியல் |
சிவராம் போஜே | அணுக்கரு | |
2007 | மாதவ் காட்கில் | சூழ்நிலையியல் |
சமீர் கே. பிரம்மாச்சாரி | உயிரியல், மருத்துவம் & மரபியல் | |
2008 | ராகவேந்திர கடேகர் | சூழ்நிலையியல் |
சி. எஸ். சேஷாத்திரி | கணிதம் | |
2009 | ய்ஷ் பால் | இயற்பியல் |
மயில்சாமி அண்ணாதுரை | பொறியியல் & விண்வெளி | |
2010 | கோவர்தன் மேத்தா | வேதியியல் |
அஜய் கே. சூட் | இயற்பியல் | |
2011 | ரோடம் நரசிம்மா | பொறியியல் & விண்வெளி |
மனீந்திர அகர்வால் | கணிதம் | |
2012 | டி.வி.ராமகிருஷ்ணன் | இயற்பியல் |
கிருஷ்ணசாமி விஜயராகவன் | உயிரியல், மருத்துவம் & மரபியல் | |
2013 | தீபங்கர் தாஸ் சர்மா | நேனோ தொழில்நுட்பம் |
எம். எஸ். நரசிம்மன் | கணிதம் | |
2014 | மகாராசா கிசான் பான் | உயிரியல், மருத்துவம் & மரபியல் |
தேவாங் ககர் | வேதியியல் | |
2015 | பல்தேவ் ராஜ் | அணுக்கரு |
கிருஷ்ணா என். கணேஷ் | வேதியியல் | |
2016 | ஸ்ரீராம் ராமஸ்வாமி | இயற்பியல் |
சஞ்சீவ் துராந்தர் | வானியற்பியல் | |
2017[1] | ஏ எஸ் கிரண் குமார்[1] | ஏரோநாட்டிக்ஸ் |
அசுதோஷ் சர்மா | நானோ தொழில்நுட்பம் | |
2018[2] | சந்தீப் திரிவேதி | கோட்பாட்டு இயற்பியல் |
சத்யஜித் மேயர் | உயிரியல் | |
2019[3] | கைலாசவடிவு சிவன் | பொறியியல் & விண்வெளி |
சேகர் மேண்டி | உயிரியல் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "H. K. Firodia Awards 2017". H. K. Firodia Memorial Foundation. Archived from the original on 2 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "Scientists honoured with HK Firodia awards in Pune". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.
- ↑ http://hkfirodiaawards.org/awards-by-year.php
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- "H. K. Firodia Foundation - Official website". H. K. Firodia Foundation. 2015. Archived from the original on November 17, 2015. பார்க்கப்பட்ட நாள் October 31, 2015.